Friday, July 10, 2015

வேலைவாய்ப்பு - நில அளவைக் கள உதவியாளர்கள்


நில அளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் உள்ள ஆரம்ப மட்ட - பகுதி தேர்ச்சிபெற்ற (PL02-2006A)  நில அளவைக் கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காகத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.



ஆகக்குறைந்த நிபுணத்துவம் : நில அளவைக்களத்தை இனங்காண உதவுதல் , அளவை உபகரணங்களையும், கருவிகளையும் பாதுகாத்தலும் பராமரித்தலும்.

உடல்சார் தகைமைகள்.- சகல விண்ணப்பதாரர்களும் இலங்கையின் எந்தப்பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கும், பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கும், தேவையான உடல், உள ரீதியான தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது.- விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்தினத்தன்று 18 வயதிற்கு குறையாமலும், 45 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (ஏற்கனவே அரச சேவையில் நிரந்தரப் பதவி வகிப்பவர்களுக்கு இவ்வுயர் வயதெல்லை ஏற்புடையதல்ல.)

ஆட்சேர்ப்பு முறை – ( எழுத்துப் பரீட்சை ) இப்பரீட்சை இரண்டு பாடங்கள் (பொது அறிவு, நுண்ணறிவு) கொண்டதோர் எழுத்துமூலப் பரீட்சையாகும். இப்பரீட்சை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் நடாத்தப்படும்.

சம்பள அளவுத்திட்டம்


விண்ணப்ப முடிவு திகதி    2015.07.30

மேலதிக விபரங்கள் 10.07.2015 வர்த்தமானியில் பார்வையிடலாம்.  

No comments:

Post a Comment