Thursday, August 02, 2012

கணினி

கணினி என்ற கருவி யொன்று
கருத்தில் தோன்றுதே இதைக்
கவனி என்று உலகம் இன்று
பரணி பாடுதே.


மனித மூளை என்று இதனை
அறிஞர் போற்றுவார்
புனிதமான இதனைப் போற்றிப்
புலமை பெறுவமே.

கல்வியிலே நிறைவு காண
கணினி உதவுமே
பல்கலையும் பயின்றிடவே
இதனைப் பயிலுவோம்.

கீ போட்டால் இன்று வாழ்வு
கீர்த்தி பெருகுதே
மௌசைத் தூக்கும் கரங்களினால்
மகிழ்ச்சி தோன்றுதே.

ஆற்றல் மிக்க கருவி யிது
அறிந்து போற்றுவோம்
ஏற்ற முண்டு வாழ்விலே
எங்கள் தோழரே.

மேற்குலகில் வளரும் கலைகள்
விரும்பிக் கற்போம் நாம்
ஏற்றமுற வழி இதுவே
எங்கள் தோழரே.
வே.தங்கராசா




1 comment:

  1. SUREஷ்December 12, 2008 5:40 PM
    நல்ல பணி ஐயாவுக்கு நன்றிகள்

    ReplyDelete

    வண்ணத்துபூச்சியார்December 29, 2008 2:36 AM
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

    வே.தங்கராசாAugust 23, 2009 7:21 AM
    நன்றி SUREஷ் மற்றும் வண்ணத்துபூச்சியார் அவர்களே

    ReplyDelete