Wednesday, August 01, 2012

வளங்கள் பெற்று மகிழலாம்


செல்வம் சேர்க்க வழிகளின்றித்
திரியும் எங்கள் தோழரே
செல்வம் சேர்க்கும் வழிகள் பல
செப்புகிறேன் கேளுங்கள்.

தோட்டம் செய்து வாழ்க்கையின்
துயரைப்போக்க முடியும் நாம்
நாட்டம் அதில் கொள்வமே!
நாமும் உயர வாய்ப்புண்டே

பன்ன வேலை செய்வமே
பாய் இழைத்து விற்பமே
சின்னச் சின்னத் தொழில்களால்
செல்வம் சிறையச் சேர்க்கலாம்

பழ ரசங்கள் காய்ச்சலாம்
பாற் பண்ணைகள் வைக்கலாம்
அழகு சாதனங்கள் செய்து
அற்புதமாய் விற்கலாம்.

தொழில்களெல்லாம் சம மென்று
துணிந்து நின்று பாடுவோம்
வழிகள் பல நமக்குண்டு
வழங்கள் பெற்று மகிழலாம்.

ஒருவர் உழைப்பை நம்பி நாம்
உணர்வு கெட்டு வாழ்வதோ?
அனைவருமே உழைத்திங்கு
ஆற்றல்பெற்று வாழலாம்.

யப்பான் நாட்டு மக்கள் போல்
நாமும் வாழப் பழகுவோம்
எப்பொழுதும் முயற்சியில்
ஈடு பட்டு உயருவோம்.

வே.தங்கராசா

1 comment:

  1. சிநேகிதிFebruary 11, 2010 11:10 PM
    //ஒருவர் உழைப்பை நம்பி நாம்
    உணர்வு கெட்டு வாழ்வதோ?
    அனைவருமே உழைத்திங்கு
    ஆற்றல்பெற்று வாழலாம்.//
    அருமை

    ReplyDelete

    வே.தங்கராசாFebruary 17, 2010 3:52 AM
    நன்றி சிநேகிதி

    ReplyDelete

    ReplyDelete