Thursday, August 02, 2012

ஆண்டவனைக் கண்டதுண்டா?


ஆண்டவனைக் கண்டதுண்டா?
அருமையண்ணா கேட்டனன்
ஆகா உண்டே என்று அவன்
அருமைத் தங்கை கூறினள்


எங்கே கண்டாய் என்று அவனும்
ஏளனமாய்க் கேட்டனன்
எங்கு முண்டே என்று அவள்
எழில் ததும்பக் கூறினள்

அன்னை பிதா வீட்டிலே
ஆண்டவராய் உள்ளனர்
உண்மைக் கல்வி ஊட்டுகின்ற
உங்கள் குருவும் கடவுளே

தெய்வம் எங்கும் உண்டெனும்
தெளிவு வேண்டும் மனதிலே
உய்வம் வாழ்வில் என்றவள்
உணர்ச்சியோடுரைத்தனள்

செய்யும் தொழிலில் தெய்வத்தைத்
தேடவேண்டும் நாமொல்லாம்
உய்யும் வழி அதுவொன்றே
உயர்வு பெற்று வாழலாம்.

வே.தங்கராசா


1 comment:

  1. வினோத்,இந்தியாSeptember 9, 2008 6:24 AM
    கவிதை நல்லாருக்கு


    வினோத்

    ReplyDelete

    வேலாயுதம் -தங்கராசாSeptember 9, 2008 6:31 AM
    நன்றி வினோத்

    ReplyDelete

    திகழ்மிளிர்December 7, 2008 8:52 PM
    அருமை

    ReplyDelete

    வேலாயுதம் -தங்கராசாDecember 8, 2008 4:23 PM
    நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete

    ReplyDelete