Monday, May 25, 2009

ஊனமது கொடுமை.....

ICUஇருக்கிறது பலவழிகள்
இழந்தவற்றை மீளமைக்க
என்றாறுதல் கொண்டாலும்
ஊனமது கொடுமை
உயிர் வாழும் வரையில்
நம்நாட்டு நிலையில்

உடனிருந்த அங்கம்
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போனால்
உடல் வலியது மாறும்
உயிர்வலியதுதானே அவன்
மாளும்வரை தொடரும்

பகிர்கையில் குறையும்
அந்தத் துன்பம்
கைகொடுத் உதவுகையில்
நிறையும் நம் நெஞ்சம்
காலத்தின் தேவையிது
நம்கண்முன்னே நிற்கிறது..
த.ஜீவராஜ்

7 comments:

  1. சொல்ல வருவது புரிகிறது... எதுவும் சொல்ல முடியாமல் மனம் தவிக்கிறது...

    ReplyDelete
  2. நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே

    ReplyDelete
  3. நன்றி மாதவராஜ் அவர்களே

    ReplyDelete
  4. காலத்தேவைக்கேற்ப தகுந்த கருத்தினை முன்வைத்துள்ளீர்கள், நன்றி.
    ரெலிகிராவ் பத்திரிகை செய்தி யின் படி, 30,000 வரையிலான தமிழ் மக்கள் மிகக்கொடுமையாக ஊனமுற்றோராக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருக்கிறது. எம்மால் முடிந்தளவு எல்லோரும் உதவி செய்தால் இழப்பினை ஈடு செய்ய முடியாவிட்டாலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையாவது எம்மால் அவர்களிற்கு வழங்க முடியும்.

    ReplyDelete
  5. நன்றி Renuka Srinivasan

    ReplyDelete
  6. நன்றி தமிழர்ஸ் - Tamilers

    ReplyDelete