Monday, May 11, 2009

யதார்த்தங்கள்.....


வேலையில்லாத பொழுது
வீண்விவாதம் செய்ய
விரும்பாத மனது - முன்
எழுதியதைப் படித்து
பிழை திருத்தென்று
ஏவியது என்னை

இணையத்தை இயக்கி
என்னுடைய பதிவிலே
எழுதிவைத்த கவிதைகளை
ஏற்ற இறக்கத்தோடு
எழுத்தெண்ணிப் படிக்கையிலே
என்னே ஆச்சரியம்

கவிதை மாந்தர்கள்
இடப்பெயர்வும் அப்படித்தான்
சுயவிருப்பின் பேரில்
ஊரும்,வீடும் அழிந்ததெல்லாம்
தானே நடந்ததாய்

யார் செய்த அழிவுகள்
யார்,யார் இந்தக்
கோரங்களின் மூலம்
என்றெழுந்த கேள்விகளின்
தேடலின் தொடக்கமே-தெரிந்தே
தொலைக்கப்பட்டிருந்தது

நாளும் நடக்கிறது -நாட்டு
நடப்புக்களை எழுதியவர்களின்
ஞாபகார்த்த நிகழ்வுகள்
சுடப்படும் பயத்தில் -இங்கே
சுருண்டு கிடக்கிறது
பலரின் சுட்டுவிரல்கள்......

முழுமைபெறாக் கவிதைகளிடம்
மன்னிப்புக் கேட்டு
ஏக்கப் பெருமூச்சோடு
எழுந்து சென்றேன்
தேடுவார் அற்றவொன்றாய்
தெருவில் கிடந்தது யதார்த்தம்.....

த.ஜீவராஜ்

6 comments:

  1. முழுமைபெறாக் கவிதைகளிடம்
    மன்னிப்புக் கேட்டு
    ஏக்கப் பெருமூச்சோடு
    எழுந்து சென்றேன்
    தேடுவார் அற்றவொன்றாய்
    தெருவில் கிடந்தது யதார்த்தம்.....

    yatharthamana kavithai

    valthukkal

    thodarnthu eluthungal jee

    ReplyDelete
  2. யதார்த்தம் மரணிக்கவில்லை மறக்கப்பட்டுத் தெருவில் கிடக்கிறது. மனித நேயமுள்ள மனிதனால் மீண்டும் தலை தூக்கும்.

    ReplyDelete
  3. நடப்புக்களை எழுதியவர்களின்
    ஞாபகார்த்த நிகழ்வுகள்
    சுடப்படும் பயத்தில் -இங்கே

    சுருண்டு கிடக்கிறது
    பலரின் சுட்டுவிரல்கள்......


    உண்மையான வரிகள் உந்தன் நிலையும் விலக்கல்ல - அவர்களுக்கு
    அங்கு நடக்கும் அவலம்களில் உன் பெயர் எப்போதும் இல்லாதிருக்கட்டும்
    உன் வரிகலூடு வைத்தியமும் தொடரட்டும் .. வாழ்த்துக்கள்

    பழைய நினைவுகளுடன் மணி

    ReplyDelete
  4. நன்றி Renuka Srinivasan

    ReplyDelete
  5. நன்றி மணி
    நம்பிக்கையோடு இருக்கிறேன் மீண்டும் சந்திப்பேன் உன்னை...

    ReplyDelete